பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர் கைது!

0
203

65 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்தில் பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 1.2 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

33 வயதுடைய சந்தேகநபர் பஹ்ரைனில் இருந்து வந்த Gulf Air விமானத்தில் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்திக்கு வருகைதந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் தனது மலக்குடலில் ஒரு கிலோ தங்கத்தை கொண்டுவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here