எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைவாசி திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென நம்புவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டொலர் வீழ்ச்சியுடன் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணம் அங்குள்ள மக்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
N.S