தேரர் கொலை சந்தேகநபர் பொலிஸ் துப்பாக்கிச் சுட்டுக்கு பலி

0
147

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய கஹதான ஸ்ரீ ஞானராம விகாரையில் தங்கியிருந்த 45 வயதுடைய நாமக தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று நள்ளிரவு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இல. 32, குடபொகுன, காஷ்யபபுர, அரலகங்வில ஆகிய இடங்களில் வசிக்கும் 27 வயதுடைய பெரேடோரபே கல்ஹார டில்ஷான், அத்தனகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிஹினியகொல்ல கால்வாய், ஊராபொல, ருவன்வெல்ல வீதிக்கு அருகில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.கடந்த 10ஆம் திகதி ஹம்பேகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.குற்றப் பிரிவின் அதிகாரிகள், சந்தேக நபரை விசேட விசாரணைக்காக ஊராபொல லிஹினியகொல்ல கால்வாய் பகுதிக்கு அழைத்து வந்த போது, அவர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. .காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரால் தாக்கப்பட்ட பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சிகிச்சைக்காக வட்டுபிட்டியலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here