ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்குப் விஜயமாகியுள்ளார்.
மிசோரம் சர்வதேச பல்கலைக்கழகத்தின் (Mizoram University) அழைப்பின் பேரில் அங்கு நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த அறிஞர் மாநாட்டின் தொடக்க உரையை ஆற்றுவதே பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் இந்திய விஜயத்தின் நோக்கமாகும்.