நாடாளுமன்றமே தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும்!

Date:

“மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும். நாட்டின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்தை எந்தத் தரப்பும் சவாலுக்குட்படுத்த முடியாது.”

  • இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு – செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுப்பதற்கு எதிராக நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை, நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிமன்றத்தின் சுயாதீனத்திலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்திலும் ஆளும் கட்சி தலையீடு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.

இந்த நிலையில் தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரி திறைசேரிச் செயலருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளித்த திறைசேரியின் செயலர், நிதியை விடுவிக்குமாறு ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்ததுடன் அவரது அனுமதியை எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இதையடுத்து, நிதியை விடுவிக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய போது,

“தேர்தல் தொடர்பில் எனது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை. நான் திரும்பவும் சொல்கின்றேன் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும். நாட்டின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்தை எந்தத் தரப்பும் சவாலுக்குட்படுத்த முடியாது” – என்று ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...