விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு உத்தரவு!

0
104

வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (மார்ச் 13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. .

இந்த வழக்கு இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி திஸாநாயக்க, மொஹமட் முஸம்மில் ஜயந்த சமரவீர மற்றும் ரொஜர் செனவிரத்ன உள்ளிட்ட 7 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்ததை அவதானித்த கொழும்பு பிரதான நீதவான், பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்ததையடுத்து வழக்கை ஜூன் 19ஆம் திகதி மீளப்பெறுமாறு உத்தரவிட்டார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here