வெலிவேரியவின் டெம்பிள் ட்ரீ சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (13) இரவு 9 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.