ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணத்திற்கு இணையாக, ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சிடமிருந்து ஆலோசனை பெற்று, தமது கோரிக்கையை நிதி அமைச்சிடம் முன்வைக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.