நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் நேற்று (15) இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் சாங் யோங்ரி உடனான சந்திப்பைத் தொடர்ந்து இப்பயணம் அமையப்பெற்றது
நாட்டின் பொருளாதார நிலையைப் பொறுத்து இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதியைப் பெறுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
இந்தியாவின் புதுடில்லிக்கு சென்ற நிதி அமைச்சர், அத்தியாவசிய உணவு, மருந்து மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்கு 1 பில்லியன் டாலர் கடன் பெரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.