Wednesday, May 8, 2024

Latest Posts

பதவிக்காலம் முடிவடையும் உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் என்ன?

மார்ச் 19 அன்று முடிவடைந்த பிறகு அவற்றைப் பராமரிப்பது பற்றி விவாதிக்கிறது

மார்ச் 19 நள்ளிரவுடன் பதவிக்காலம் முடிவடையும் 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறித்து அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுநர்களுடன் அலரி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஆளுநர்களான டிக்கிரி கொப்பேகடுவ (சப்ரகமுவ), வசந்த கர்ணகொட (வடமேற்கு), எம்.ஜே.எம். முசம்மில் (ஊவா), மஹிபால ஹேரத் (வடமத்திய), வில்லி கமகே (தெற்கு), லலித் யூ. கமகே (மத்திய), அனுராதா யஹம்பத் (கிழக்கு) ரொஷான் குணதிலக்க (மேற்கு), ஜீவன் தியாகராஜா (வடக்கு), பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக செயலாளர் நீல் ஹபுஹின்ன மற்றும் பிரதமரின் சட்ட ஆலோசகர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி கோஸ்டா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.