Saturday, July 27, 2024

Latest Posts

இன்றைய செய்தி சுருக்கம் – 17/03/2023

  1. இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்கவின் கீழ் மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்களின் (பண அச்சடிப்பு) பங்குகளின் அதிகரிப்பு 11 மாதங்களில் ரூ.995 பில்லியனை பதிவு செய்துள்ளது: 5 ஏப்.2022 இல் ரூ.1,730 பில்லியனில் இருந்து 2023 மார்ச் 15ஆம் திகதிக்குள் ரூ.2,725 பில்லியனாக உயர்ந்த்துள்ளது : அதாவது 15 மார்ச் 2023 வரையான பதினோரு மாதங்களில் ரூ.121 பில்லியன் பணம் அச்சிடப்பட்டுள்ளது.

2. தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழு மகாநாயக்க தேரர்களிடம் கருத்துக்களை அறிய நாடியுள்ளனர்.

3. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுப்பொறியாளர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். திறைசேரியிலிருந்து தேவையான நிதி இன்னும் கிடைக்கப்பெறாததால், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலம் இதுகுறித்து அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

4. அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் வேல்சியடைந்துள்ளது. 344.68 இலிருந்து 346.33 ஆக ரூபாய் வேல்சியடைந்துள்ளது. ரூபாய் வலுவடையும் என்று மத்திய வாங்கி ஆளுனர் வீரசிங்கவின் கருத்துக்கள் இருந்தபோதிலும் கடந்த 6 நாட்களில் ரூபாயின் பெறுமதி ரூ.20.81 (6.4%) வரை சரிந்துள்ளது: “கிரே மார்க்கெட்” quotes தரவுப்படி ஒரு USD யின் பெறுமதி இலங்கை ரூபாயில் ரூ.375.00க்கு மேல் அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. EFF இன் 1வது மதிப்பாய்வில் தொழிற்சங்கங்களின் தனிப்பட்ட வருமான வரி முன்மொழிவுகளை IMFக்கு ஜனாதிபதி முன்வைப்பார் என்று GMOA க்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து கடிதம் கிடைத்துள்ளதாக GMOA செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

6. மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் 36ஆவது பொலிஸ் மா அதிபராக நியமனம் : தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன மார்ச் 25ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.

7. இலங்கையில் 4 மணித்தியாலங்களுக்கு ஒருமுறை தற்கொலைகள் நடைபெறுவதாக தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் ரொஹான் ரத்நாயக்க கூறுகிறார்: 2022 ஆம் ஆண்டில் 2,833 ஆண்களும் 574 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்: மேலும் ஆடை தொழிற்சாலை ஊழியர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறுகிறார்.

8. SLPP எம்பியும் முன்னாள் SEC தலைவருமான டாக்டர் நாலக கொடஹேவா, இலங்கை ரூபாய் ஒரு வாரம் முழுவதும் பெறுமதி அதிகரிக்கப்பட்டமை ஒரு “நகைச்சுவை” என்று கூறுகிறார்: கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஒரு திவாலான நாடு எப்படி மதிப்புமிக்க நாணயத்தை வைத்திருக்க முடியும் என்று வினவுகிறார்.

9. வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்க அனுமதி வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் முறையீட்டை CB ஆளுநர் நந்தலால் வீரசிங்க நிராகரித்தார்: அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக மார்ச் 2020 முதல் வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் CB ஆளுநர் சமீபத்தில் அதிக அளவு அந்நிய செலாவணி மத்திய வங்கிக்கு வந்ததாகக் கூறினார்.

10. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட 73வது FIFA காங்கிரசுக்காக உலக கால்பந்து நிர்வாகக் குழுவின் உயர்மட்ட கால்பந்து நிர்வாகிகள் உட்பட கிட்டத்தட்ட 2,000 பிரதிநிதிகள் கிகாலியில் சந்தித்தபோது, FIFA தேர்தல்களின் போது வாக்களிப்பதில் இருந்து இலங்கை இடைநிறுத்தப்பட்டது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.