புதினுக்கு எதிராக கைது உத்தரவு!

0
201

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.

போர் விதிகளை மீறி ரஷியா பல்வேறு கொடூரச் செயல்களை அரங்கேற்றி வருகிறது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய ஜனாதிபதி புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், போர்க் குற்றத்தைப் புரிந்ததாக கூறி ரஷிய ஜனாதிபதிக்கு விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here