ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணில் வெளியிட்டுள்ள தகவல்

0
244

2024ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அதுவரை எந்தத் தேர்தலையும் நடத்தாது என்றும் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாராந்தப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இதன்படி அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கூட்டத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அப்படியிருந்தும், நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என்று அவர் எங்கும் குறிப்பிடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், எண்ணாயிரம் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை கொண்டு உள்ளூராட்சி நிறுவனங்களை நடத்துவது கடினம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here