இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி

0
54

இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனுக்காக குறித்த தொகை பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடனில், ஏற்றுமதி, சுற்றுலா, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் “குறைவான” சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 50 மில்லியன் டொலர் கடன் வழங்கப்படவுள்ளது.

கடனுதவி தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட நிதித்துறை நிபுணர் மனோஹரி குணவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் கருத்துத் தெரிவிக்கையில்,

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% பங்களிப்பை வழங்குகின்றன மற்றும் மக்கள் தொகையில் 45 சதவீதமானோர் வேலை செய்கின்றனர்.

எனவே, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, குறிப்பாக பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு, பொருளாதாரத் துறைக்கு பங்களிப்பை நிலைநிறுத்தவும் வளர்க்கவும் தேவையான ஆதரவை வழங்குவது முக்கியம் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட நிதித்துறை நிபுணர் சுட்டிக்காட்டி உள்ளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here