ரணிலுடனான இரகசிய சந்திப்பில் யோஷித்த கலந்து கொண்டது ஏன்?

0
197

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது முக்கிய கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகன் யோஷித ராஜபக்ஷவும் கலந்துகொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் யோஷித ராஜபக்சவை பங்கேற்க வைத்தது யார் என வினவியபோது, “மகிந்த ராஜபக்சவின் தற்போதைய வயது… அவரின் திறமைக்கு ஏற்ப அவரது பிள்ளைகளில் ஒருவரோ அல்லது யாரோ ஒருவர் பங்கேற்பார்” என்று பதிலளித்தார்.

எனினும், யோஷித ராஜபக்ச வருவது தமக்கு தெரியாது எனவும், கலந்து கொண்டதால் தான் கோபமடைந்ததாகவும் குறிப்பிட்ட சில ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை எனவும், யோஷிதவின் வாகனம் பின்னால் வந்தது எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here