இலங்கையில் அதிகரித்த நைஜீரிய சைபர் குற்றவாளிகள்

Date:

நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) தெரிவித்துள்ளது. அத்துடன், நைஜீரிய சைபர் குற்றவாளிகளை நாடு கடத்தவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தற்போது ஒரு தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி உருவாக்கப்பட்டு வருவதுடன், வெளிநாட்டு சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியர்கள். 12 மாத காலப்பகுதியில், 5,400 முறைப்பட்டு தரவுகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த குற்றங்களில் தோராயமாக 75 வீதமானவர்கள் இலங்கையர்களாலும், 25 வீதமானவர்கள் நைஜீரியர்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அச்சுறுத்தி பணம் பறித்தல் தொடர்பாக 670 முறைப்பாடுகள், சமூக ஊடக சுயவிவரங்களை ஹேக்கிங் செய்வது குறித்து 370 முறைப்பாடுகள், பாலியல் துன்புறுத்தல் குறித்து 260 முறைப்பாடுகள், 1,400 அவதூறு வழக்குகள், 20 சைபர் டெரரரிசம் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் 2,280 சைபர் கிரைம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மேலும், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கணினிகள் பற்றாக்குறை உள்ளதுடன், பெரும்பாலான ஊழியர்கள் அலுவலக நோக்கங்களுக்காக தங்கள் தனிப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...