திருகோணமலை விபத்தில் மட்டக்களப்பு இளைஞன் சாவு!

Date:

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த மேற்படி இருவரும் மோட்டார் சைக்கிளில் திருகோணமலைக்கு வந்து மீண்டும் மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துள்ளார்கள். இதன்போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் மட்டக்களப்பு – செங்கலடி, கணபதிப்பிள்ளை நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மதுசாந் (வயது 22) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...