அநுரவுடன் கைகோர்த்த மூன்று இராணுவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில்!

Date:

தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) அரசியலில் ஈடுபட்டதற்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா உட்பட மூன்று இராணுவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பிய அவர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா எந்தவொரு விமானப்படைத் தளத்திற்கும் நுழைவதற்கும் விமானப்படை நிகழ்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் சக்தியுடன் தீவிர அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக துயகொண்டா கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“எந்தவொரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு தடையில்லை. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கமல் குணரத்ன போன்ற எத்தனையோ ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தீவிர அரசியலில் உள்ளனர். இந்த மூன்று அதிகாரிகளும் ஒரு போட்டி அரசியல் கட்சியுடன் அரசியல் செய்கிறார்கள் என்பதற்காக அவர்களை கட்டுப்படுத்துவது நியாயமற்றது,” என்று அவர் கூறினார்.

என்ற கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை எனவும், கம்பஹாவில் இடம்பெற்ற அரசியல் பேரணியில் உரையாற்றியதற்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் விமானப்படையின் நற்பெயரையும் ஒழுக்கத்தையும் களங்கப்படுத்தியதன் காரணமாக இவ்வாறு கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...