சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ருமேனியா நாட்டிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளதால், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நியமனம் மார்ச் 31 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
