தோட்ட தொழிலாளர் சம்பள விடயம், விடாபிடியான நிலைப்பாட்டில் காங்கிரஸ்!

Date:

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் புதன்கிழமை தொழில் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின் தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.

“தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தோட்ட கம்பெனிகள் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட தோட்ட கம்பெனிகளுக்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக மட்டுமே அமையும். தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள உயர்வையே கோரினோம்” என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்தார்.

இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு

மத்திய காசாகாரத்திலிருந்து அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் தொகை காணாமல் போன...

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...