அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக வழக்கு!

0
140

கிரீஸ் அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு வழங்கிய திறைசேரி பத்திரங்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

அதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளின் பின்னர் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரீஸ் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதை அறிந்தும் அந்நாட்டு அரசு வெளியிட்ட திறைசேரி பத்திரங்களை வாங்கியதன் மூலம் அரசுக்கு 1,843,267,595 (1843.3 மில்லியன்) ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இது தொடர்பான புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாட்டில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட ஐவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here