குளியாப்பிட்டிய ஹொறொம்பாவ பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வியடைந்துள்ளது.
குளியாப்பிட்டி ஹொரொம்பாவ பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு 92 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 26ஆம் திகதி நடைபெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 27 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமகி ஜன பலவேகய மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன இணைந்து போட்டியிட்ட பொது எதிரணிக் குழு 65 ஆசனங்களை பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த சீசனில் நடைபெற்ற பல கூட்டுறவுத் தேர்தல்களில் இவ்வாறான தோல்விகளைச் சந்திக்க நேர்ந்ததுடன், கடந்த வருட இறுதியில் நடைபெற்ற பல உள்ளூராட்சி வரவு செலவுத் திட்டத் தேர்தல்களிலும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.