உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி கூடவுள்ளனர்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா கருத்து வெளியிடுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை நடத்த வேண்டியுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிக்கும் பணி நேற்று (28) நடைபெறவிருந்த நிலையில், அது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பணம் செலுத்தாததால் தபால் ஓட்டுகளை அச்சிடுவதை அரசு அச்சகம் நிறுத்தியதால் தபால் வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
N.S