முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள வீடொன்றை கையளிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
இந்த இடைக்காலத் தடை இன்று முதல் நான்கு வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனு நீதியரசர்கள் பிரீதிபத்மன் சுரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் யசந்த கோதாகொட ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளுக்கான மையம் மனு தாக்கல் செய்திருந்தது.