வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும் அமைக்க முடிவு ; டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

0
260

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர பஸ் நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறியுள்ளார்.

இன, மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது. அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தன்னோடு இணைந்து வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததார் எனவும் அவர் கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here