புத்தாண்டுக்குள் எரிபொருள் இல்லை என யாராவது கூறினால் அது அப்பட்டமான பொய் என துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குவதற்கு ஏற்கனவே கப்பல்கள் இலங்கைக்கு வந்துவிட்டதாகவும், மேலும் ஓர்டர் செய்யப்பட்ட கப்பல்கள் வந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.