நேற்றைய வன்முறையில் 37 பேர் காயம், 45 பேர் கைது

0
76

மிரிஹானவில் நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 37 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 14 STF உத்தியோகத்தர்கள், 03 பொலிஸார் மற்றும் 03 ஊடகவியலாளர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 44 பேர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here