நுகேகொடை மிரிஹான பிரதேசத்தில் நேற்றிரவு நடந்த மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டகார்கள் பேருந்துக்கு தீ வைக்கும் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மக்களின் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்து உட்பட சில வாகனங்கள் தீ எரிந்து அழிந்து போயின. மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு செல்லும் பகுதியில் நேற்றிரவு பெருமளவில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்களில் ஒரு பெண் உட்பட 45 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தும் நாட்டில் ஆங்காங்கே மக்கள் எதிர்ப்புகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.