விரைவில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு

0
191

எதிர்வரும் 3ஆம் திகதி நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ள போராட்டங்களினால் சில குழப்பங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் நாளை நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்திற்கு முன்பாக நேற்றிரவு தொடக்கம் இன்று காலை வரை இடம்பெற்ற அமைதியின்மையால் எதிர்வரும் 3ஆம் திகதி நாட்டில் சில குழப்பங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) பிற்பகல் அரசாங்க உறுப்பினர்களுடன் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 3ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஜனாதிபதி இதற்கு பதிலளிக்கவில்லை. நிலைமை குறித்து அடுத்த சில மணித்தியாலங்களில் முடிவு எடுக்கப்படும் என உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கைத்தொழில் அமைச்சராக அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட எஸ்.பி.திஸாநாயக்க ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பேச எழுந்த நிலையில் ஏனைய உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக எமக்கு தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here