கேரள கஞ்சா தொகை ஒன்றுடன் நான்கு கலால் அதிகாரிகள் உட்பட 08 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 45 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.