சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் எற்பாட்டில் புனித ரம்ழானின் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று முஸ்ஸிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸலாமி யா மதரஸா மண்டபத்தில் மெலளவி பி.எ.ஏஸ்.சுபியான் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சிறி சாய்முரளி கலந்து சிறப்பித்தார்.
இதில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமதக்குழுக்களின் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வுக்கான நல்லாசி உரைகள் நிகழ்த்தப்பட்டன.
பின்னர் மாலை 06.23 மணியளவில் குரான் துவாங்கு ஓதப்பட்டதுடன் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்த்தப்பட்டது.
யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் தலைவர் மெலளவி பி.எ.ஏஸ். சுபியான் ஆகியோர்களுக்கிடையிலான நட்பு ரீதியான பரிமாற்றங்கள் பகிரப்பட்டன.
இதில் இஸ்லாமியர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு இப்தார் நோன்பினை கடைப்பிடித்தனர்.