ஞானாக்காவின் ஆலயத்தை சுற்றிவளைத்த ஹிருணிகா

0
284

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் மகளிர் குழுவொன்று அநுராதபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஜனாதிபதி கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் ஆலயத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

ஞானாக்கா நடத்தி செல்லும் ஆலயத்தில் ஆன்மிக அமைதி தேடி கோட்டாபய அடிக்கடி அங்கு சென்று வருவது வழமை.இந்நிலையில் ஜனாதிபதி ஆலயத்திற்கு வரவுள்ளார் என்ற தகவலின் பேரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சம்பவ இடத்திற்கு ஏராளமான பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அனுராதபுரத்தில் பல எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here