விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் மற்றும் விமான நிலையங்களில் இருந்து வெளியேறுவோர் கவனத்திற்கு

0
99

விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் மற்றும் விமான நிலையங்களில் இருந்து வெளியேறுவோர் பயண சீட்டு மற்றும் விமான கடவுச்சீட்டு ஆகியவற்றை ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here