நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணியை கொழும்பில் முன்னெடுத்துள்ளது.
நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ள போதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ள போதும் அதனைக் கருத்திற் கொள்ளாது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை முடக்குவதற்கு பொலிசாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் வீதிகளில் இறக்கப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வீதித் தடைகளும் போடப்பட்டுள்ளன.
இந்த தடைகளையும் மீறி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.