சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

0
211

சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, சமூக வலைத்தளங்கள் மீதான தடையை இன்று(03) மாலை 3.30 மணியுடன் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் உடனடியாக செயற்பாட்டுக்கு கொண்டு வருமாறு பொது பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு மற்றும் அனைத்து அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் அறிவித்துள்ளது.

இதனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று பிற்பகல் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய சனிக் கிழமை நள்ளிரவு முதல் சமூக வலைத்தள ஊடகங்கள் முடக்கப்பட்டன.

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளதுடன் அரசாங்கத்திற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை மேலோங்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here