உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தனவுடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இத்தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்திற்குள் கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்ப்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (04) கூடவுள்ளது.