ரணிலுக்கு ஆதரவு, சஜித் – ரணில் இணைந்து செயற்பட வேண்டும் – ராஜித

0
117

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டத்திற்கும் வித்தியாசம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி – ஐமச ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இல்லை எனவும், தற்போது நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதியுடன் உடன்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர், நாட்டில் பாரிய சாதகமான மாற்றம் காணப்பட்டதாகவும், நாட்டு மக்களும் ரணில் விக்கிரமசிங்க மீது மிகுந்த அபிமானத்தை கொண்டுள்ளதாகவும் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் எவ்வாறு ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வது என்பது குறித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here