2023ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 125,495 ஆக பதிவாகியுள்ளது.
மார்ச் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ரஷ்யா, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகை முறையே 102,545 மற்றும் 107,639 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில், ரஷ்யா, இந்தியா மற்றும் இங்கிலாந்து தவிர, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளன.
N.S
