ஆண்டு இறுதியில் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடையும்!

0
103

2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் குறைவாக மாறும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளதாக ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் குறைவாக இருக்கும் என நம்புவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

இலங்கையின் இருதரப்பு மற்றும் வர்த்தக கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். அதுவே இலங்கையின் உத்தி. ரூபாயின் பெறுமதியை சந்தையே தீர்மானிக்கிறது. மத்திய வங்கி அதில் தலையிடாது. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here