அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கசண்ட்ராவுடன் இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

0
200

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர, அவுஸ்திரேலியாவின் பெடரல் (Federal) நாடாளுமன்ற உறுப்பினர் கசண்ட்ரா பெர்னாண்டோவை (Cassandra Fernando) சந்தித்தார்.

கடந்த வருடம் பெடரல் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பியான கசண்ட்ரா பெர்னாண்டோவிற்கு வாழ்த்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அவுஸ்திரேலியரை அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வைத்திருப்பதில் இலங்கை மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகவும் தெரிவித்தார்.

உயர்ஸ்தானிகர் வாகீஸ்வரா மற்றும் கசண்ட்ரா பெர்னாண்டோ ஆகியோர் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடியதுடன் அவுஸ்திரேலியா – இலங்கை உறவுகள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயவும் ஆலோசித்துள்ளனர்.

உயர்ஸ்தானிகருடன் பிரதி உயர்ஸ்தானிகர் சாமரி ரொட்ரிகோவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here