இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து விலகியது

0
97

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்து அரசாங்கத்துடன் பயணிக்கும் என கருதப்பட்ட போதும் சற்று நேரத்திற்கு முன்னர் ராஜாங்க அமைச்சர் தொண்டமானும் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகி உள்ளது.

இதனால் அரசாங்கம் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் என கருதப்படுகிறது.

பாராளுமன்றத்திற்குள் புதிய அரசாங்கம் ஒன்று உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என பரவலாகப் பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here