பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த மார்ச் 22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
N.S