ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை சுற்றி இன்று (06) காலை கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கட்சி அமைப்பாளர்கள் குழு ஒன்று கட்சி தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்ட போது பொலிசார் அவர்களை தடுத்துள்ளனர்.
கட்சித் தலைமையகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகள் பல காணாமல் போயுள்ளதாகவும், கட்சி தலைமையகத்திற்குள் யாரும் பிரவேசிக்க பொலிஸார் தடை விதித்துள்ளதாகவும் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால செய்த முறைப்பாடு தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவிடம் பொலிஸார் அறிவித்துள்ள போதிலும், சம்பவத்துடன் தொடர்பில்லாத ஸ்ரீலங்கா கட்சியின் தலைமையக கேட்போர் கூடத்துக்குள் தன்னை நுழைய விடாமல் பொலிஸார் தடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.