ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் அபிமானம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
“இப்போது வரிசைகள் உள்ளனவா? இல்லை. மின்சாரம் துண்டிக்கப்படுமா?.. இல்லை. நாமும் பார்க்கிறோம்.. மக்களும் கூறுகிறார்கள். தனித்து ஆட்சியில் சேரும் நம்பிக்கை எனக்கு இல்லை. முதலில் ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை வைக்க வேண்டும். அவர்கள் அந்தக் கோரிக்கையை முன்வைத்து, அதைக் கேட்கவில்லை என்றால், நாங்கள் குழுவாக ஒரு முடிவை எடுக்க முடியும்.”
நேற்று (06) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.