புத்தாண்டு காலத்தில் மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 18 (செவ்வாய்கிழமை) வரை பொதுப் போக்குவரத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இயக்குநர் ஜெனரல் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 15ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து பிற மாகாணங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இதே திட்டத்தின் கீழ் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 18 வரை பயணிகள் அந்தந்த இடங்களிலிருந்து கொழும்புக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 7,000 பேருந்துகள் இந்த காலப்பகுதியில் இயக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தனியார் பேருந்துகளும் அதிகமாக சேவையில் ஈடுபடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
N.S