உலகில் செல்வாக்கு மிக்க நபர் ஷாருக்!

Date:

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2023-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிடும்.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சியை விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்தார்.

கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன.

இந்த பட்டியலில் தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற நபர்களும் இடம்பெற்றுள்ளனர்.

மொத்தம் பதிவான 12 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் 4 சதவீத வாக்குகளைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதான் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, ஷாருக்கான் வாசகர் வாக்கெடுப்பில் வெற்றியாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...

தவறான தகவல்களை மறுத்து சம்பத் வங்கி விளக்கம்

Lanka News Web எனும் டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளைத்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...