இலங்கை மத்திய வங்கியின் அடுத்த ஆளுநராக நியமிக்கப்படவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த வீரசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் CBSL ஆளுநராக பதவியேற்பதற்காக நாடு திரும்பியிருந்தார்.
புதிய மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி வீரசிங்க நாளை கடமைகளை பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.