மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 07 ம் திகதி அன்று தடை விதித்துள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கடந்த காலத்தில் நாட்டில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் எனவும் முன்னாள் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்தபோதே அதன்படி, அஜித் நிவார்ட் கப்ராலுக்கு ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பயணத் தடை விதிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.