சிங்கள – தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக அரசாங்கம் ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், நாளை (08) மாலை வரை கொழும்பிலிருந்து வெளியேறப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் வாரத்தில் திட்டமிட்டபடி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வார இறுதியில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றிற்காக பெருந்திரளான மக்கள் கூடவிருந்தனர்.
கடந்த மார்ச் 30ஆம் தேதி முதல் 9 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது