ஆட்சி பொறுப்பை ஏற்க தயார்- சஜித் பிரேமதாச

Date:

ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்

எனினும் அவ்வாறு தான் ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை நீக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறானதொரு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் தற்காலிக அரசாங்கமோ இடைக்கால அரசாங்கமோ கொண்டு செல்ல முடியாது.

ராஜபக்சர்களின் தலைமைத்துவம் அல்லது அவர்களுடன் தொடர்புடையோர் இந்த செயற்பாடுகளிலிருந்து விலகி இருப்பார்களாயின் நாம் பேச்சுவார்த்தைக்கு தயார்.

இந்த நாட்டு மக்கள் மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பாதிப்பிலிருந்த அவர்களை துரிதமாக மீட்டெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...